< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
முனியப்ப சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
|23 July 2023 11:31 PM IST
முனியப்ப சாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரையில் முனியப்ப சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி முனியப்ப சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டனர்.