< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அனுமந்தராயபெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
|1 Nov 2022 12:44 AM IST
அனுமந்தராயபெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புன்னம் ஊராட்சி குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் சாலையில் அனுமந்தராய பெருமாள் கோவில் உள்ளது. நேற்று மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசி மாலை, வெற்றிலை மாலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், துளசி, வெற்றிலை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.