பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து எங்களிடம் பேசுகிறார்கள்: ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி
|பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து தினமும் எங்களிடம் பேசுகிறார்கள் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஒரு மாத காலமாக பாஜக தேசிய தலைமையிடம் இருந்து என்னிடம் தினமும் பேசி வருகிறார்கள். பாஜக - அதிமுக கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே (செய்தியாளர்கள்) கூறுகிறீர்கள்.
பாஜகவுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகத்தில் ஈடுபடுவது யார் என்று உங்களுக்கு தெரியும். பிரதமருக்கு அருகில் இருந்து விட்டு தற்போது உறவு இல்லை என சொல்வது யார்? பாஜக தேசிய தலைமையிடம் மாநில தலைமையிடம் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. பாஜக மூன்றாவது முறையும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை பெற்றுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயராக உள்ளோம். அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அதிமுக பாஜக உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை" என்றார்.