< Back
மாநில செய்திகள்
கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு
மாநில செய்திகள்

கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு

தினத்தந்தி
|
2 Feb 2024 7:41 PM IST

தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார்.

சென்னை,

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார். 20-ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும் 21-ம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 12-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.


மேலும் செய்திகள்