< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
உவரி கடற்கரையில் பனை விதைகள் விதைப்பு
|5 Oct 2023 2:11 AM IST
உவரி கடற்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
திசையன்விளை:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி சார்பில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் கடற்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மேஜர் ராஜன் தலைமை தாங்கினார். சுயம்புலிங்க சுவாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், கல்லூரி தமிழ்துறை தலைவர் நிர்மலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் பனை விதைகளை விதைத்தனர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளியப்பன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.