< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஏரிக்கரையில் 4 ஆயிரம் பனைவிதைகள் விதைப்பு
|4 Oct 2023 11:22 PM IST
ஏரிக்கரையில் 4 ஆயிரம் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களால் ஏரி, குளம், சாலை ஓரங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது. மேலும் பனை மரங்கள் வெட்டப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் தன்னார்வ இளைஞர்கள் சார்பில் லட்சக்கணக்கில் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பல ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டுள்ளது. அதேபோல நேற்று பனங்குளம் பெரியகுளம் ஏரிக்கரை பகுதியில் நாம் தமிழர்கட்சி சார்பில் சுமார் 4 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டது.