< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க டெண்டர் கோரியது தெற்கு ரெயில்வே!
|7 Oct 2023 9:49 AM IST
கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது.
சென்னை,
தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவை அளிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே ரெயில் நிலையம் அமைக்க அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. புறநகர் ரெயில்கள் நின்றுசெல்லும் வகையில் மூன்று நடைமேடைகளுடன் ரெயில் நிலையமானது அமைய உள்ளது.
புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஒரு ஆண்டிற்குள் முடிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.