< Back
மாநில செய்திகள்
தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் ஆய்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் ஆய்வு

தினத்தந்தி
|
18 Dec 2022 12:09 AM IST

திருவாடானை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார்.

தொண்டி,

திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார். அப்போது திருவாடானை காவல்துறை சரகத்தில் உள்ள கொலை, கொள்ளை, போக்சோ, கடத்தல் போன்ற முக்கிய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சரகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின்போது திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், வனிதா ராணி, கோமதி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம், தலைமை காவலர்கள் அருண்குமார், கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்