< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தஞ்சையில் தென்மண்டல அளவிலான சிலம்பம் போட்டி - திறமையை வெளிப்படுத்தி அசத்திய வீரர், வீராங்கனைகள்
|5 Sept 2022 1:46 AM IST
சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
தஞ்சை,
தஞ்சை மாவாட்டத்தில் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கலை கழகம் சார்பில் தென்மண்டல அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஒற்றை கம்பு சண்டை, இரட்டை கம்பு சண்டை, வாள்வீச்சு, மான்கொம்பு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.