< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு
மாநில செய்திகள்

சென்னையில் இன்று உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு

தினத்தந்தி
|
6 Feb 2024 7:54 AM IST

உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

சென்னை,

வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது.

வெளிநாடுகளில் என்னென்ன பல்கலைக்கழகங்கள் உள்ளன? என்னென்ன படிப்புகள் உள்ளன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த மாநாட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்க உள்ளார் .

மேலும் செய்திகள்