< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் பகுதியில் விரைவில் ஆய்வு - திருமாவளவன்
|30 Aug 2022 11:26 AM IST
பரந்தூர் பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என கூறினார்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம், சேத்துப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது,
விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் பகுதியில் மக்களின் குடியிருப்புகளை அகற்றாமல், அவர்களின் விளைநிலங்களை அப்புறப்படுத்தாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு, தரிசு புறம்போக்கு பகுதிகளை மட்டுமே கையகப்படுத்தி விமான நிலையம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் பகுதியில் விரைவில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.