< Back
மாநில செய்திகள்
சோணைகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சோணைகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

சாயல்குடியில் சோணைகருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

சாயல்குடி

சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சோணை கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார்.. சாயல்குடி பேரூராட்சி சேர்மன் மாரியப்பன், துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், முன்னாள் சாயல்குடி பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா, சாயல்குடி 10-வது வார்டு உறுப்பினர் குமரையா, சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சோணை கருப்பணசாமிக்கு மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருந்ததியர் உறவின்முறை, அண்ணாநகர் கிராம பொதுமக்கள், டாக்டர் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்