< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுபோதையில் தகராறு செய்த மகன்: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்துக் கொன்ற தாய்
|4 May 2024 11:46 PM IST
திருவண்ணாமலை அருகே மகனை கல்லால் அடித்துக் கொலை செய்த தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ் அதிகளவில் குடித்துவிட்டு, அவரது தாய் ருக்குமணி மற்றும் அவரது சகோதரி முனியம்மாளிடம் சண்டை போட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த இருவரும், கொதிக்கும் எண்ணெயை சுரேஷின் தலையில் ஊற்றியதுடன், அருகே இருந்த கல்லைக் கொண்டு தலையில் அடித்துக் கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தாய் ருக்குமணி மற்றும் அவரது சகோதரி முனியம்மாளை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.