செங்கல்பட்டு
மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது
|மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்தகளத்தூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் துலுக்கானம் (வயது 60). அவரது மனைவி சம்பூரணம் (56). அவரது 2-வது மகள் ஜெயந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த டார்ஜன் (34). என்பவருக்கும் திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
டார்ஜனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இது குறித்து தட்டிக்கேட்ட மாமியார் சம்பூரணம் மாமனார், துலுக்கானத்தை கட்டையால் தாக்கி விட்டு டார்ஜன் தப்பிச்சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த துலுக்கானம் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பூர்ணம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மறைமலைநகர் இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த டார்ஜனை தாலுகா போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.