< Back
மாநில செய்திகள்
தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக் கொன்ற மகன் - தாய் கைது, தப்பியோடிய மகனுக்கு வலைவீச்சு
மாநில செய்திகள்

தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை அடித்துக் கொன்ற மகன் - தாய் கைது, தப்பியோடிய மகனுக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
25 Sept 2023 12:17 AM IST

வேலூர் அருகே தகாத உறவில் ஏற்பட்ட தகராறின்போது தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர்,

குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி என்கிற செல்வி. இவருக்கு நவீன் குமார் என்ற மகன் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பரத் என்பவருடன் வளர்மதிக்கு பழக்கம் ஏற்பட்டு தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அறிந்த மகன் நவீன் குமார் தனது தாயை கண்டிக்கவே பரத்துடன் பேசுவதை வளர்மதி தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரத் கடந்த 14-ம் தேதி வளர்மதி வீட்டிற்கு சென்ற போது, வீட்டில் இருந்த நவீன் குமாருக்கும் பரத்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த நவீன் குமார் இரும்பு ராடால் பரத்தை தாக்கியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரத் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தாய் வளர்மதியை போலீசார் கைது செய்த நிலையில் தப்பியோடிய அவரது மகன் நவீன் குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்