< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'சில நிறுவனங்கள் லாபத்தை விட அதிகமாக பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியுள்ளன' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
|17 March 2024 8:59 PM IST
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க. அரசு வசூல் செய்துள்ளது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சித்துள்ளார்.
சென்னை,
தேர்தல் பத்திரங்கள் மூலம் சில நிறுவனங்கள் லாபத்தை விட அதிகமாக பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களை பார்க்கும்போது, சொற்ப லாபத்தைப் பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் லாபத்தை விட மிக அதிகமான தொகையை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மத்திய விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக் கொண்டு, பா.ஜ.க. அரசு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளார்கள் என்பது புரிகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.