< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - மத்திய இணை மந்திரி எல்.முருகன் உறுதி
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - மத்திய இணை மந்திரி எல்.முருகன் உறுதி

தினத்தந்தி
|
3 Sept 2023 3:43 AM IST

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக எல்.முருகன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்