ராணிப்பேட்டை
சோளிங்கர், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம் ஏரிகள் நிரம்பின
|சோளிங்கர், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம் ஏரிகள் நிரம்பின.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம் ஏரிகள் நிரம்பி கடைவாசல் செல்கிறது. இதனை சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் பார்வையிட்டு கடைவாசல் தண்ணீர் மலர்தூவி வரவேற்றார். ஏரியின் கொள்ளவு, ஏரிகரையின் உறுதி தன்மை, கடைவாசல் வழியாக எத்தனை கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கடைவாசல் பகுதியில் குளிக்கவோ, 'செல்பி' எடுக்கவோ கூடாது, துணிவைப்பதை தவிர்க்க தடுப்பு அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலரிடம் கேட்டுக்கொண்டார்.
பொதுப்பணித்துறை அலுவலர்கள் சேரலாதன், மெய்யழகன், சோளிங்கர் நகர செயலாளர் கோபால், மேற்கு ஒன்றிய தலைவர் கார்த்திக், செங்கல் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ரவி உள்ளிட்ட சோளிங்கர், நெமிலி ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.