< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை
|6 Jun 2022 1:31 AM IST
உயர்மட்ட சாலை அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்சி:
திருச்சி மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாநகரை ஒட்டிய நெரிசலுள்ள பகுதிகளில் உயர்மட்ட சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து ஓடத்துறை காவிரி பாலத்தில் இருந்து சிந்தாமணி அண்ணாசிலை, குடமுருட்டி சோதனைச்சாவடி வழியாக மல்லாச்சிபுரம் வரை சுமார் ரூ.400 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு 2 இடங்களில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக சத்திரம் பஸ் நிலையம் அருகே நேற்று மண் பரிசோதனை நடைபெற்றது. விரைவில் அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.