< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மண் எடுக்கும் நிகழ்ச்சி
|11 Oct 2023 12:30 AM IST
கடையம் பகுதியில் மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடையம்:
பாரதீய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றிபெற வேண்டி கடையத்தில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு சென்னையில் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவிலில் நடைபயணம் வெற்றி பெற வேண்டி புனித மண் எடுக்கப்பட்டது.