< Back
மாநில செய்திகள்
ஏலகிரிமலை 10-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மண் அரிப்பு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஏலகிரிமலை 10-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மண் அரிப்பு

தினத்தந்தி
|
11 Oct 2022 5:18 PM GMT

ஏலகிரிமலை 10-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் மலைப்பாதை ஏறும் பொழுது 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 10-வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதடைந்தும், சாலையின் அடிப்பகுதியில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் செல்லும் பொழுது சாலையில் அதிர்வுகள் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் சென்றால் சாலை சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வரும் காலம் மழைக்காலம் என்பதால் மண்ணரித்து சாலை சரியும் நிலையில் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, அசம்பாவிதம் நடைபெறும் முன்னே தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்