< Back
மாநில செய்திகள்
ரூ.80 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்
தர்மபுரி
மாநில செய்திகள்

ரூ.80 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்

தினத்தந்தி
|
20 April 2023 12:15 AM IST

ஜக்கசமுத்திரத்தில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

பாலக்கோடு

பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் முகமை திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்தில் சமையல் அறையுடன் கூடிய சமுதாய திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சமுதாய திருமண மண்டபத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதில் ஜக்கசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்