< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"கேமரா முன்பு மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்படும்" அண்ணாமலை பரபரப்பு டுவீட்
|4 Sept 2022 6:29 PM IST
கேமராக்கள் முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலை நாட்டப்படும் எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை,
திமுக ஆட்சியில் கேமராக்களுக்கு முன்பு மட்டுமே சமூக நீதி நிலைநாட்டப்படும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பட்டியலின பெண் தலைவருக்கு அவமரியாதை நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் கூடிய இடத்தில் வாக்குவாதம் முற்றியதால் கண் துடைப்பிற்காக அவர் மேடையில் அமரவைத்ததாகவும், கேமராக்கள் முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலை நாட்டப்படும் எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.