< Back
மாநில செய்திகள்
பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
18 Sept 2022 5:09 PM IST

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகநீதி நாள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

திருவள்ளூர்,

தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அனைத்து துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நாள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்ட இயக்குனர் மல்லிகா, மாவட்ட வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, அலுவலக மேலாளர் (நீதியியல்) மீனா மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்