< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
|17 Sept 2023 12:35 AM IST
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருவதால் நேற்று முன்தினமே பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி பெரம்பலூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியா்கள், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் ஆகியோர் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.