தி.மு.க ஆட்சியில் சமூக சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது - ஓ.எஸ்.மணியன்
|தி.மு.க ஆட்சியில் நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட சமூக சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது என ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக அமைப்புச் செயலாளர், ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசுகையில்,
99.5 சதவீதம் அ.தி.மு.கவினர் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 13 கட்சி கூட்டணியுடன் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது புரட்டிப் போடப்பட்டுள்ளது என ஒரு நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது அரசுக்கு அவமானம்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தி.மு.க ஆட்சியில் நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட சமூக சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது என்று பேசினார்.