< Back
மாநில செய்திகள்
கோட்டூரில்  சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு  மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கோட்டூரில் சாலையோர பள்ளத்தை மண்ணை கொட்டி மூடிய அதிகாரிகள்-தார் போட்டு மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

கோட்டூரில் சாலையோரத்தில் இருந்த பள்ளம் தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடப்பட்டது. ஜல்லிக்கற்களுடன் தார் கலந்து மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

பொள்ளாச்சி

கோட்டூரில் சாலையோரத்தில் பள்ளம்தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடப்பட்டது. ஜல்லிக்கற்களுடன் தார் கலந்து மூட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

மண்ணை கொட்டி மூடினர்

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா சார்ந்த பகுதி என்பதாலும் தினமும் வெளியூர்களில் இருந்து வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில் சினிமா படப்பிடிப்பும் கோட்டூர் பகுதிகளில் அதிகமாக நடைபெறும். இதனால் கோட்டூரில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோட்டூரில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையில் சாலை அமைத்த சில மாதங்களிலேயே கடை வீதியில் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மழைக்கு கரையும் அபாயம்

கோட்டூர் கடை வீதி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. அதன்பிறகு அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு அந்த பள்ளத்தை மண்ணை கொட்டி பெயரளவிற்கு மூடினர்.

கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. திடீரென்று பலத்த மழை பெய்தால் மண் கரைந்து சென்று விடும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அலட்சியமாக மண்ணை கொட்டி உள்ளனர். எனவே ஜல்லி கற்களுடன் தார் கலந்து பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்