< Back
மாநில செய்திகள்
வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில்சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
கரூர்
மாநில செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில்சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்

தினத்தந்தி
|
29 May 2023 12:19 AM IST

வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில்சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம் வந்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள டி. ஆண்டிபட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. அகில இந்திய காந்திய இயக்க தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும், வாக்காளர் விழிப்புணர்வு இயக்க பிரச்சாரகரும், சமூக ஆர்வலருமான இவர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு பலமுறை தனது மனைவி சித்ராவுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், இவர் தன்னந்தனியாகவே விழிப்புணர்வு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அவர் நேற்று குளித்தலை பகுதி வழியாக தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். இவர் தனது சைக்கிளில் தேசியக்கொடிகளை கட்டிக்கொண்டு, விழிப்புணர்வு வாசகங்களை சைக்கிளில் பொருத்திக்கொண்டு, சைக்கிளை தள்ளிக் கொண்டே தனது விழிப்புணர்வு நடை பயணத்தை மேற்கொண்டார். சிறிய ஒலிபெருக்கி மூலம் பதிவு செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களை பொதுமக்கள் கேட்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிக்கச் செய்தார். அதுபோல விழிப்புணர்வு கருத்துக்களை தானாகவே ஒலி பெருக்கி மூலம் பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடந்த மாதம் ஓசூரில் இருந்து இவர் தனது சைக்கிள் நடை பயணத்தை தொடங்கி கோயம்புத்தூர் பகுதிக்கு வந்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கரூர், திருச்சி, பெரம்பலூர் போன்ற முக்கிய நகரப் பகுதி வழியாக உத்திரமேரூர் சென்றடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்