< Back
மாநில செய்திகள்
இதுவரை 92.26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
மாநில செய்திகள்

இதுவரை 92.26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

தினத்தந்தி
|
12 Dec 2022 9:17 PM IST

தமிழகத்தில் இதுவரை 92.26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஞ்செய்தியை அனுப்பி வருகிறது. மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை 92.26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"கடந்த 7 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 3.21 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 1.58 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 92.26 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்