கள்ளக்குறிச்சி
இதுவரை 85 சதவீதம் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 85 சதவீதம் வாக்காளர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
85 சதவீத வாக்காளர்கள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 85 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படாமல் உள்ளனர்.
சிறப்பு முகாம்
எனவே வாக்காளர்களின் நலன்கருதி இன்று(ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களின் ஆதார் விபரத்தை வீடு வீடாக சென்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் இதுவரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர்கள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் விபரத்தை அளித்து வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.