< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில் கடும் பனிப்பொழிவு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில் கடும் பனிப்பொழிவு

தினத்தந்தி
|
30 Dec 2022 12:15 AM IST

தர்மபுரியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் அதிகளவில் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி சென்றதை காணமுடிந்தது. இந்த பனிப்பொழிவால் காலை வேளையில் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் அவதியடைந்தனர். மேலும் கடும் பனிப்பொழிவால் காலை நேரத்தில் பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பின்னர் நேரம் நேரம் செல்ல பனி விலகி சூரிய கதிர்கள் வீச தொடங்கியது.

மேலும் செய்திகள்