< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
11 மணி ஆகியும் விலகாத பனி: நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி
|1 Dec 2022 4:43 PM IST
காலை 11 மணியை தாண்டியும், அடர்பனி விலகாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் நல்ல மழையை கொடுத்தாலும், தற்போது அதன் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், தற்போது தமிழகத்தில் பனி கடுமையாக உள்ளது.
அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 11 மணியை தாண்டியும், அடர்பனி விலகாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், வாகன நடமாட்டமும் குறைவான அளவிலேயே உள்ளது. அடர்பனிமூட்டத்தின் காரணமாக சூரியவெளிச்சம் குறைவாக கானப்படும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே ஓட்டிச்செல்கின்றனர்.