சேலம்
ஏற்காட்டில் தொடர் மழை-பனி மூட்டம்சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
|ஏற்காட்டில் தொடர் மழை-பனி மூட்டம்சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் மாலை 4 மணிக்கு கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை, பஸ்நிலையம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால், அருகே உள்ள பொருட்களை கூட காண முடியாத சூழல் ஏற்பட்டது. மலை பாதையிலும் பனி மூட்டமாக காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினர்.
மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மாலை நேரத்திலேயே வாகனங்கள் இயக்கப்பட்டதை காணமுடிந்தது. இந்த பனி மூட்டத்தால் கடுங்குளிர் நிலவியது. இந்த பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டதுடன் மகிழ்ச்சி அடைந்தனர். பனிமூட்டத்தை தொடர்ந்து இரவில் கனமழை பெய்து வருகிறது.