< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
புதர் மண்டிய பூங்காவில் நடமாடும் பாம்புகள்
|26 May 2022 9:39 PM IST
புதர் மண்டிய பூங்காவில் நடமாடும் பாம்புகள்
விருதுநகர்
விருதுநகர் ராமச்சந்திரன் தெருவில் குடிநீர் வினியோகத்திற்கான நகராட்சி மேல்நிலைகுடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு அருகில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட பூங்கா உள்ளது. இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படாத நிலையில் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் தஞ்சமடையும் இடமாக பூங்கா மாறிவிட்டது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு படையினரிடம் அப்பகுதி மக்கள் புகார் கூறிய நிலையில் உரிய நடவடிக்கை எடுக்காதநிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி பூங்காவை முறையாக பராமரிக்கவும், அதற்கு முன்பு பூங்காவில் தஞ்சமடைந்துள்ள பாம்புகளை பிடித்து அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.