< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செம்மரக்கட்டைகள் கடத்தல் - 25 தமிழர்கள் கைது
|16 July 2023 12:41 PM IST
ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி,
ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க அதிரடிப்படை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 25 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பிஞ்ச தும்மல் பைலுவில் 5 பேரும், பீலேர் வனப்பகுதியில் 20 பேரும் செம்மரக்கட்டை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 19 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.