கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டையில் பரபரப்புஅ.தி.மு.க. பிரமுகர் இடத்தில் செம்மண் கடத்தல்லாரி, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
|உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு அ.தி.மு.க. பிரமுகர் இடத்தில் செம்மண் கடத்திய போது லாரி, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் சவுக்குதோப்பு உள்ள இடங்களில், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிலர், லாரிகளில் செம்மண் அள்ளி கடத்தி சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மட்டிகை கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில், 2 லாரிகளில் ஒரு பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி, செம்மண் அள்ளினர்.
இதுபற்றி அறிந்த அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செண்பகவேல் தலைமையில் பொதுமக்கள் சிலர் திரண்டு சென்று, 2 லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை வருவாய் துறையினர், திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். அதில் செம்மண் அள்ளிய இடம், திருநாவலூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செண்பகவேலுவுக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்து. இதையடுத்து, லாரி டிரைவர்கள் உள்பட 4 பேரை திருநாவலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.