< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே  ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
27 Aug 2023 5:52 PM IST

திருவள்ளூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், வாகனத்திற்குள் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சின்னத்தம்பி தெரு, பெரிய மார்க்கெட் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்