< Back
மாநில செய்திகள்
காரில் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காரில் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 July 2023 1:42 AM IST

நெல்லையில் காரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுன் செல்லும் நேதாஜி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொடிமரம் ஆட்டோ நிறுத்தம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் காரில் சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்த பிச்சையா மகன் மாரியப்பன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் காரின் உரிமையாளரான தாழையூத்து கரையிருப்பு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்