< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகே    2 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறிமுதல்    டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் அருகே 2 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறிமுதல் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
17 Oct 2022 12:15 AM IST

திருக்கோவிலூர் அருகே 2 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் போலீசார் டீ.குன்னத்தூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தினர். ஆனால், அதை ஓட்டிவந்தவர், நிறுத்தாமல் சென்றார். இைதயடுத்து அந்த வாகனத்தை துரத்தி சென்றனர். அதற்குள் அதை ஓட்டிவந்தவர் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், அந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். அதில் 50 மூட்டைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர் யார்? எங்குள்ளார் என்று வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்