< Back
மாநில செய்திகள்
கம்மாபுரம் அருகே போலீசாரை கண்டதும்    கடத்தல் ரேஷன் அரிசியுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு 2 பேர் ஓட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

கம்மாபுரம் அருகே போலீசாரை கண்டதும் கடத்தல் ரேஷன் அரிசியுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு 2 பேர் ஓட்டம்

தினத்தந்தி
|
15 Sep 2022 6:45 PM GMT

கம்மாபுரம் அருகே போலீசாரை கண்டதும் கடத்தல் ரேஷன் அரிசியுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு 2 பேர் ஓடிவிட்டனர்.


கம்மாபுரம்,

நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊ.மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, தனிப்பிரிவு காவலர் பரணி ஆகியோர் கம்மாபுரம் அடுத்த முதனை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணி மேற்கொண்டனர்.

முதனை - மேலக்குப்பம் ரோட்டில் சரக்கு வாகனம் வேகமாக வந்தது. போலீசாரை கண்டதும் அந்த வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி விட்டு, அதில் வந்த 2 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். உடனே போலீசார், அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில், 2 டன் ரேஷன் அரிசி இருந்தது.

பறிமுதல்

36 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்தபோது, போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பி ஓடியது போலீசுக்கு தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியையும், அதனை கடத்தி வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து கடலூர் குடிமை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்