கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது
|திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் போலீசார் மாடாம்பூண்டி பஸ்நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 பெண்கள் கையில் 4 பைகளை எடுத்து வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து, பைகளை சோதனை செய்தனர். அதில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேற்கொண்டு அவர்களிடம் விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம் முகையூர் கிராமம் பிளவேந்திரராஜ் மனைவி எலிசபத்மேரி (வயது 65), ஆயந்தூர் பிரான்சிஸ் மனைவி அற்புதமேரி (55) என்பதும், மதுபாட்டில்களை அருதங்குடியை சேர்ந்த கண்ணன் மனைவி கமலா என்பவருக்கு கொடுக்க கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எலிசபத்மேரி, அற்புதமேரி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.