< Back
மாநில செய்திகள்
சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் ரூ.1.43 கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது
மாநில செய்திகள்

சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் ரூ.1.43 கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 July 2022 3:01 AM IST

கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

சார்ஜாவில் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், இ-சிகரெட்கள், செல்போன்கள், குங்குமப்பூ ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்