< Back
மாநில செய்திகள்
கோவையில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
மாநில செய்திகள்

கோவையில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்

தினத்தந்தி
|
21 Oct 2023 8:40 AM IST

கோவை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை,

கோவையில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு சர்வதேச அளவிலிருந்து விமானங்கள் மூலம் பயணிகள் வந்து செல்வர். ஐக்கிய அமீரக தலைநகர் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்தது. இதில் இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் திருவாரூரை சேர்ந்த தீபா மற்றும் கடலூரை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களை சோதனை செய்த போது அவர்கள் சுமார் 1.57 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இவர்கள் தங்களது உள்ளாடை மற்றும் மலக்குடலுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர். இதனை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்