< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
|5 July 2023 12:32 AM IST
கந்தர்வகோட்டையில் சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
கந்தர்வகோட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையிலான போலீசார் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
4 பேர் கைது
சோதனையில் சரக்கு வேனில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் செல்வம் (வயது 21), ராஜேந்திரன் மகன் ராஜமோகன் (34), ஹரிகரன் (20), வீரடிப்பட்டியை சேர்ந்த சிவகுமார் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 ேபரையும் போலீசார் கைது செய்து, சரக்கு வேனுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.