திருச்சி
ராமேசுவரம் ரெயிலில் 4½ கிலோ கஞ்சா கடத்தல்
|ராமேசுவரம் ரெயிலில் 4½ கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம் ரெயிலில் 4½ கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ரெயிலில் சோதனை
புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில் நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரெயிலில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பொது பெட்டியில் சந்தேகத்தக்கிடமான வகையில் ஒருவாலிபர் பையுடன் நின்றுகொண்டிந்தார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா, 2.6 கிலோ கஞ்சா கலந்த பொடி ஆகியவை இருந்தது.
4½ கிலோ கஞ்சா பறிமுதல்
இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிலாப் நாயக் (வயது 37) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா, ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.