< Back
மாநில செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை
மாநில செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
16 Aug 2023 1:50 AM IST

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது


சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது அவர் கொண்டு வந்த பையில் களிமண் போன்ற பொருளுடன் தங்க துகள்கள் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது. களிமண்ணில் இருந்து தங்கத்துகள்களை அதிகாரிகள் பிரித்து எடுத்து தங்கக்கட்டியாக்கிய போது, ரூ.59 லட்சத்து 28 ஆயிரத்து 210 மதிப்புள்ள 995 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் என தெரியவந்தது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்