< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் புகையிலை கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிளில் புகையிலை கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் சினந்தோப்பு விலக்கில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சாக்குமூட்டையில் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை கடத்திய தேரிகுடியிருப்பு மேல தெருவை சேர்ந்த சுதா ஆனந்த்(வயது 41), திசையன்விளை காமராஜ்நகரை சேர்ந்த ராமசாமி(62) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்