தேனி
கேரளாவுக்கு கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
|கேரளாவுக்கு கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தேனி மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் கம்பம்மெட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஜீப் ஒன்று வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் மறித்து சோதனை செய்ய முயன்றனர். அப்போது ஜீப்பில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அதிகாரிகள் ஜீப்பில் சோதனை ெசய்தபோது மூட்டைகளில் 1,750 கிலோ அரிசி இருந்தது. இதையடுத்து அரிசி மற்றும் ஜீப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தியதில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனர்.