< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.2.56 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 5 பேர் கைது
|23 Jun 2023 4:31 PM IST
தங்கத்தை கடத்தி வந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பேங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சோதனை நடத்திய அதிகாரிகள், அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.56 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கத்தை கொண்டு வந்திருந்த 5 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.