வேலூர்
புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்
|கே.வி.குப்பம் அரசு மகளிர் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஆகியவை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை பூ.ராணி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி முருகன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவிதா, உதவி தலைமை ஆசிரியை பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை இ.கெட்சி ஜெப செல்வி வரவேற்றார்.
மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சீ.முரளிதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பலதா புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மாணவிகளுக்கு துணிப்பை வழங்கினார். முடிவில் பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கோ.சீனிவாசன் நன்றி கூறினார்.